தடுப்பூசி தயாரிப்பதில் இந்தியா உடனான அமெரிக்காவின் பணி மக்களின் உயிர்களை காப்பாற்றுகிறது.
அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதி கழகமானது அந்நாட்டின் மேம்பாட்டு வங்கி ஆகும். இது உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் முதலீடுகளை செய்து இருக்கிறது. இதனுடைய தலைமை செயல் அதிகாரி டேவிட் மார்சிக், உயர்மட்ட தூதுக்குழுவுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வந்து 26-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா பெரும் சக்தியாக திகழ்கிறது என்பதை டேவிட் மார்சிக் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அதிகாரி டேவிட் மார்சிக் கூறியபோது “இந்தியா தடுப்பூசியில் மாபெரும் சக்தியாக விளங்குகிறது. அந்நாட்டுடன் அமெரிக்காவின் பணியானது மக்களின் உயிர்களை காப்பாற்றுகிறது. மேலும் 2.3 பில்லியன் டாலருக்கும் அதிகமான எங்களது முதலீட்டில் இந்தியா மிக முக்கியமான பெரிய கூட்டாளி நாடாகும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.