Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எல்லாரும் உறுதிமொழி எடுக்கனும்…. நீங்கள் கண்டிப்பா தடுப்பூசி செலுத்தனும்…. கலெக்டரின் தகவல்….!!

குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் வேலூர் ஜெயின் சங்கம் சேர்ந்து ஜெயராம் செட்டி தெருவில் கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தி வருகின்றது. இந்த முகாமை சிறப்பு அழைப்பாளராக வந்த வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது முகாமில் கலெக்டர் பேசியபோது, வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. எனவே தற்போது வரை மாவட்டத்தில் 2 லட்சத்து 62 ஆயிரம் நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இதனையடுத்து கொரோனா முதல் அலையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் கூறிய ஆலோசனையின்படி, பெரும் உயிரிழப்புக்களை தடுத்ததாக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். அதேபோன்று 2-வது அலையிலும் சிறுதளவு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒரு வாரமாக இந்த மாவட்டத்தில்  பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்பு, தடுப்பூசி செலுத்துதல் போன்றவை காரணமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இவ்வாறு தொடர் முகாமில் இதுவரை 6,500 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனவே ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கொரோனா தொற்றின் 3-வது அலை பரவல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் தங்களையும், குடும்பத்தினரையும், எதிர்கால சந்ததியினரையும் காப்பாற்ற கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி கொண்டு 3-வது அலையை எதிர்கொள்ள அனைவரும் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கொரோனாவை விரட்டியடிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றும் அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |