Categories
விளையாட்டு

நிறைவடைந்தது ஒலிம்பிக் திருவிழா …. 48-வது இடத்தில் இந்தியா ….!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வந்த 32-வது ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது .

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்றனர். இந்நிலையில் விறுவிறுப்பாக நடந்து வந்த ஒலிம்பிக் திருவிழா இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதில் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்தால்  நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் ,வண்ண லேசர் காட்சிகள் நடைபெற்றது. அத்துடன் நிறை விழா அணிவகுப்பு நடைபெற்றது.

இந்தியாவிற்கு மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற வீரர் பஜ்ரங் புனியா அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி வந்தார். இந்த நிறைவு விழாவில் 2024 -ஆம் ஆண்டில்  அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பிரான்ஸ் நாட்டிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறது. இதையடுத்து இந்த ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தையும், சீனா 2-வது இடத்தையும் ,ஜப்பான் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. அதோடு இந்திய 1 தங்கம் உட்பட 7 பதக்கங்களுடன் 48-வது இடத்தில் உள்ளது .

 

Categories

Tech |