Categories
தேசிய செய்திகள்

நிறைய மார்க் வேணுமா?…. அப்போ இந்த கண்டிஷனுக்கு ஓகே சொல்லு!…. பேராசிரியர் மீது மாணவி பரபரப்பு புகார்….!!!!

தாதாபடி பகுதியிலுள்ள ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தான் ஒரு பாடத்தில் தோல்வியடைந்த நிலையில், தேர்ச்சி பெறுவதற்கு பேராசிரியர் கிரிஷ்குமாரை சந்திக்க சொல்லி சகமாணவர் அர்பித் வற்புறுத்தினார்.

இதையடுத்து பேராசிரியர் கிரிஷ்குமாரை சந்தித்தபோது, பாலியல் இச்சைகளுக்கு ஒத்துழைத்தால் தோல்வியடைந்த பாடத்தில் அதிக மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சியடைய வைப்பதாக அவர் கூறியதாக மாணவி புகாரில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று பேராசிரியர் கிரிஷ்குமார் அதிக மதிப்பெண் வழங்குவதாகக் கூறி பல மாணவிகளை அழைத்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பேராசிரியர் கிரிஷ்குமார் மற்றும் மாணவர் அர்பித் போன்றோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |