பாதாள சாக்கடை குழாயை சீரமைக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் கர்ண கொல்லை அருகில் தெற்கு, வடக்கு, மேற்கு போன்ற தெருக்களில் கழிவுநீர் தொட்டி நிரம்பி வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை குழாயை சீரமைக்கவும், கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.