Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நிரப்புவியா?. மாட்டியா?… வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி… கைது செய்த காவல்துறையினர்…!!

வாலிபரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவேன் என மிரட்டிய ரவுடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கருங்காளியம்மன் கோவில் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவருக்கு சிவ கிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சிவ கிருஷ்ணன் வேலையில் இருக்கும்போது தாளமுத்துநகர் பகுதியில் வசிக்கும் முத்து மல்லையாராஜ், லயோ மற்றும் ரமேஷ் ஆகிய மூன்று பேரும் இணைந்து ஒரே மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றுள்ளனர். அப்போது சிவ கிருஷ்ணனிடம் முத்து மல்லையா ராஜ் தங்களது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்ரோல் டேங்கை நிரப்ப வேண்டும் அதற்கு பணம் தர மாட்டோம் என்று கூறியுள்ளனர். அதற்கு சிவ கிருஷ்ணன் தன்னால் அவ்வாறு செய்ய முடியாது என்று அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த முத்து மல்லையா ராஜ் மற்றும் அவரின் நண்பர்கள் இணைந்து சிவ கிருஷ்ணனை தாக்கியதோடு நாட்டு வெடிகுண்டு வீசி உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிவ கிருஷ்ணன் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்து மல்லையாராஜை கைது செய்து அவரிடம் இருந்த நாட்டு வெடிகுண்டு, கத்தி மற்றும் அரிவாள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் முத்து மல்லையாராஜின் மீது ஏற்கனவே  பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரின் பெயர் ரவுடி பட்டியலில் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்து மல்லையா ராஜை கைது செய்ததோடு தப்பிச்சென்ற ரமேஷ் மற்றும் லயோவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |