நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு நீதிபதி மார்ட்டின் சாம்பர்லின் அனுமதி வழங்கியுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட வைர வியாபாரியான நிரவ் மோடி தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவுக்கு லண்டன் மாஜிஸ்திரேட் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதற்கு நீரவ் மோடி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, இது குறித்து லண்டன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்க கோரி லண்டன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் நீரவ் மோடி மன உளைச்சலில் இருப்பதால் இந்தியாவிற்கு சென்றால் தற்கொலை செய்து கொள்ளவும் வாய்ப்புள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லண்டன் ஐகோர்ட் நீதிபதி மார்ட்டின் சாம்பர்லின் அந்த மனுவை விசாரித்ததோடு நாடு கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்ய நிரவ் மோடிக்கு அனுமதி வழங்குவதாக உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவானது மத்திய அரசின் நாடு கடத்தும் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது . இந்த தீர்ப்பினை ஐகோர்ட் வழங்கி இருப்பதால் ஜாமீன் மனு தாக்கல் செய்ய நீரவ் மோடி மீண்டும் முயற்சிக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.