நிரவ் மோடி, தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்துவதை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீது மீதான விசாரணை இங்கிலாந்து நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நடந்திருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தின் நேஷனல் வங்கியில் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி 13 ஆயிரம் கோடி பணத்தை மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிவிட்டார். இந்தியாவின் கோரிக்கை படி கடந்த 2019 ஆம் வருடத்தில் லண்டன் காவல்துறையினர் அவரை கைது அங்கு சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்தியா தாக்கல் செய்த வழக்கில், லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் நீதிபதியான, சாம் கூசி நிரவ் மோடியை இந்திய நாட்டிற்கு நாடு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், நிரவ் மோடி அந்த உத்தரவுக்கு எதிராக இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அந்த வழக்கு விசாரணை நேற்று தொடங்கப்பட்டது. அதில், நிரவ் மோடி மன நலம் சரியில்லாமல் இருப்பதாகவும், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அவரை அடைக்கும் பட்சத்தில் அவர் தற்கொலை செய்ய வாய்ப்பிருக்கிறது என்று அவரின் வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.
எனினும், அவருக்கு தகுந்த சிகிச்சை மேற்கொண்டு கவனித்துக் கொள்வதாக இந்தியா சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விரைவாக தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.