நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவர் பவன் குப்தா. இவர் தரப்பு வாதங்கள் தாமதமாக முன்வைக்கப்படுவதாக டெல்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. தனது தரப்புக்காக வாதாட புதிய வழக்கறிஞரை நியமிக்க அவகாசம் வேண்டும் என பவன் குப்தா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய வழக்கறிஞராக ரவி காஸியை நியமித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், குற்றவாளிகளின் மறுசீராய்வு மனு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த காரணத்தால் தூக்குத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.