கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. முக்கிய 4 குற்றவாளிகளிகளுக்கு இன்று தூக்கு தண்டனை வழங்கப்பட்டு இருந்த நிலையில் அதை நேற்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்தது.
இதனிடையே மற்றொரு குற்றவாளியான வினய்சர்மாவின் தண்டனையில் இருந்து கருணை காட்ட குடியரசு தலைவருக்கு மனு அனுப்பிய நிலையில் அதனை குடியரசு தலைவர் நிராகரித்துள்ளார். ஏற்கனவே முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்த நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். நான்கு பேரில் இரண்டு பேர் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்னும் இரண்டு பேர் கருணை மனு தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.