Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷ் மீண்டும் மனு தாக்கல்!

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ், தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளான்.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி மாறி பயன்படுத்தியதால் 3 முறை தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் வருகின்ற 20 ஆம் தேதி காலை 5: 30 மணிக்கு  அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய நால்வரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Image result for Nirbhaya Mukesh

இதனிடையே முகேஷ் சிங் என்ற குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தான். இந்த மனு  நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லாததால் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இதையடுத்து நேற்று நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் அக்‌ஷய் குமார் , பவன் குப்தா, வினய் சர்மா, முகேஷ் சிங் ஆகிய 3 பேர் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என குற்றவாளிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்தநிலையில் நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ், தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளான். வரும் 20 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற இருக்கும் நிலையில் இந்த மனுவை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |