Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷ் சிங் மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு!

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளான்.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி மாறி பயன்படுத்தியதால் 3 முறை தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் வருகின்ற 20 ஆம் தேதி காலை 5: 30 மணிக்கு  அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய நால்வரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இதனிடையே முகேஷ் சிங் என்ற குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தான். இந்த மனுவை நேற்று முன் தினம் அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லாததால் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இதையடுத்து  நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் அக்‌ஷய் குமார் , பவன் குப்தா, வினய் சர்மா, முகேஷ் சிங் ஆகிய 3 பேர் தரப்பில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

Image result for Nirbhaya murder convict Mukesh Singh has filed a petition in the Delhi High Court.

அதை தொடர்ந்து நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ், தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவை நேற்று காலை தாக்கல் செய்தான். அந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் குற்றவாளி முகேஷ் சிங் மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை  தாக்கல் செய்துள்ளான். தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி அளிக்கப்பட்ட மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளான். அந்த மனுவில், 2012 ஆம் ஆண்டு பாலியல் சம்பவம் நடக்கும் போது, அந்த இடத்தில் தாம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளான்.

Categories

Tech |