Categories
தேசிய செய்திகள்

“தூக்கு தண்டனையை உறுதி செய்தது மகிழ்ச்சி”… நிர்பயாவின் தாயார்..!!

அக்சய் குமாரின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது மகிழ்ச்சியளிக்கிறது என நிர்பயாவின் தாயார்  ஆஷா தேவி தெரிவித்துள்ளார்

2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் 18 வயதுக்கு கீழ் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்‌ஷய் குமார் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. இதில், அக்‌ஷய் குமார் தவிர மற்ற மூவரின் சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இச்சூழலில், அக்‌ஷய் குமார் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி. சிங்கும் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த சீராய்வு மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெறவிருந்த நிலையில், நீதிபதி பாப்டே இவ்வழக்கில் இருந்து தன்னை விலக்கிக்கொள்வதாக அறிவித்தார்.

Image result for nirbhaya case akshay kumar

இதனையடுத்து இந்த மனுவின் மீதான விசாரணை இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. அதன்படி குற்றவாளி அக்‌ஷய் குமார் தரப்பில் தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை தொடங்கி நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் மதியம் 1 மணிக்கு வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட  அக்சய் குமாரின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது.

Image result for nirbhaya mother asha devi

மேலும் சீராய்வு மனு மீதான மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யவதாக இருந்தால் 1 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தது. இந்நிலையில் அக்சய் குமாரின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது மகிழ்ச்சியளிக்கிறது என நிர்பயாவின் தாயார்  ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |