Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்புகள் : ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்பு திட்டங்கள் என்னென்ன – முழு விவரம்!

பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில்

சிறப்பு தொகுப்பு திட்டம் :

  • ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
  • வளர்ச்சியை ஏற்படுத்தவும், தன்னிறவை உருவாக்கவும் இந்த சுயசார்ப்பு பாரத திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 5 அம்ச நோக்கங்களுடன் ரூ.20 லட்சம் கோடியிலான ‘தன்னிறைவு இந்தியா’ திட்டம் உருவாக்கபட்டுள்ளதாகவும், சுய சார்பு பாரதம் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • இந்த திட்டத்தின் 5 முக்கிய தூண்களாக பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழிநுட்பம், மக்கள் சக்தி, தேவைகள் உள்ளது.
  • பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து இந்த சிறப்பு பொருளாதார தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது
  • உள்ளூர் தயாரிப்புகளை சர்வதேச விற்பனை பொருட்களாக மாற்றுவது, தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என கூறியுள்ளார்.

சிறு,குறு நிறுவனங்களுக்கான அறிவிப்புகள் :

  • சிறு,குறு நிறுவனங்கள் தொழிலை விரிவுபடுத்த ரூ.10,000 கோடி கடன் வழங்கப்படும்.
  • சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி மதிப்பிலான துணை கடன் வழங்கப்படும்
  • சிறு,குறு நிறுவனங்களின் முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்படும்.
  • உற்பத்தி, சேவை துறையில் உள்ள நிறுவனங்கள் இடையேயான பாகுபாடு களையப்படும்.
  • ரூ.200 கோடிக்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது.
  • நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்வு
  • வாராக்கடன் பட்டியலில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு புதிய கடனாக ரூ.50,000 கோடி வழங்கப்படும். ஏற்கனவே கடன் பெற்று செலுத்த முடியாமல் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் இதற்கு தகுதியானவர்கள்
  • சிறப்பாக செயல்படும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.50,000 கோடி கடன் வழங்கப்படும்
  • சிறப்பு திட்டம் மூலம் 2 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவார்கள்.
  • கடன் பெறும் சிறு குறு நிறுவனங்கள் முதல் 1 ஆண்டுக்கு கடனை திருப்பி செலுத்த தேவையில்லை
  • RERA-வின் கீழ் பதிவு செய்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமானத்தை முடிக்க வேண்டியதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
  • ரூ.200 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அரசுத்துறைகள் உலக அளவில் டெண்டர் கோரத் தடை
  • சிறு குறு தொழில் நிறுவனங்கள் என்பதற்கான வரையறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வரையறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.

சிறு,குறு தொழில்களுக்கான அறிவிப்புகள் :

  • சிறு ,குறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடனுதவி திட்டம் அக்டோபர் 31ம் தேதி வரை செயல்படுத்தப்படும்.
  • சிறு,குறு தொழில்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் சந்தைகள் உருவாக்கப்படும்.
  • 15 திட்டங்களில், 6 திட்டங்கள் சிறு குறு தொழில் துறைக்கானது
  • சிறு,குறு தொழில்களுக்கு வழங்கும் கடனை திருப்பி செலுத்தும் காலம் 12 மாதங்களுக்கு பின் தொடங்கும்.
  • புதிய கடன் வசதியைப் பெற சொத்துப்பத்திரங்கள் போன்ற பிணை எதையும் தரத் தேவையில்லை கடனுக்கான உத்தரவாதத்தை வங்கி நிதி நிறுவனங்களுக்கு அரசு வழங்கும்.
  • ரூ. 3 லட்சம் கோடி கடனுதவி திட்டத்தால் 45 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் என அறிவித்துள்ளார்.
  • சிறு, குறு தொழில் உலக அளவிலான டெண்டர் நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
  • சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின்னணு சந்தை இணைப்பு வழங்கப்படும்
  • வாராக்கடன் பட்டியலில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு புதிய கடனாக ரூ.50,000 கோடி வழங்கப்படும்.

ஏழைகளுக்கான திட்டங்கள் :

  • நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு 48 லட்சம் டன் உணவு தானியம் விநியோகிக்கப்பட்டுள்ளது
  • ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.52000 கோடி செலுத்தப்பட்டுள்ளது
  • ஏழைகளுக்கு உதவுவதற்காக ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது
  • ஒவ்வொரு சுகாதார ஊழியருக்கும் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையை பன்முகத்தன்மை கொண்ட யோஜனா வழங்கியுள்ளது.
  • ரூ.18 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி, மக்களுக்கு திரும்ப தரப்பட்டுள்ளது. வருமான வரி பிடித்தம் திரும்ப செலுத்தபட்டதன் காரணமாக 14 லட்சம் வரி செலுத்துபவர்கள் பயனடைந்துள்ளனர்.
  • ஜன்தன், ஆதார், மொபைல் போனுடன் இணைந்த நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளது.
  • 69 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
  • 71,700 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் பல்வேறு மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
  • ரூ.52,606 கோடி 41 கோடி ஜன் தன் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதுது
  • 69 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது
  • தூய்மை இந்தியா, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, இலவச கேஸ் சிலிண்டர் போன்றவை இந்த காலத்தில் கைகொடுத்துள்ளன
  • பிரதான் மந்திரி கிசான் திட்டம், நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்துதல் போன்றவை முழு முடக்க காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது.

மின்வாரியத் துறை அறிவிப்புகள் :

  • மின்வாரியங்ளுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு இதன் பயனை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படும்
  • தேசிய நிதி மேம்பாடு கழகத்திற்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படும்
  • மின்சாரத் துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக மின்சாரத்தில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது
  • கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் நாட்டை தன்னிறைவு அடைய செய்துள்ளன என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  • எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது. உலகம் முழுவதற்கும் இன்று இந்தியா தான் மருந்துகளை கொடுத்து உதவுகிறது என நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

நிதி நிறுவனங்களுக்கான அறிவிப்புகள் :

  • வங்கி சேவை இல்லாத நிதி நிறுவனங்களுக்கு சுமார் 30,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • இதன் மூலம் சிறு குறு தொழில் நிறுவனங்களில் முதலீட்டை பெறவும், எளிதாக கடன் பெறவும் முடியும். இதனால் அரசுக்கு ரூ.2500 கோடி செலவு ஏற்படும்
  • ஏற்கனவே 3 மாத சலுகையை அரசு வழங்கியிருந்தது. இதன் மூலம் 72 லட்சம் தொழிலாளர்கள் மேலும் பயன்பெறுவார்கள்.

வருமான வரி மற்றும் பிஎப் அறிவிப்புகள் :

  • 2019-20ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிப்பு
  • வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் மாதத்திலிருந்து நவம்பர் வரை நீட்டிப்பு.
  • நாளை முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை ஊதியம் வழங்கும் போது பிடிக்கும் டிடிஎஸ் வருமான வரி தொகையில் 25% குறைப்பு, வரி விகிதம் குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • இதன் மூலம் மக்கள் கைகளில் சுமார் ரூ.50000 கோடி அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும்
  • ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மேலும் 3 மாதங்களுக்கான பி.எஃப் தொகையினை மத்திய அரசே செலுத்தும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Categories

Tech |