இந்திய வான்வெளி விமானப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்திய வான்வெளி விமானப் பாதைகள் தொடர்பாக திருத்தங்கள் கொண்டுவரப்படும் என கூறிய அவர், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில்,
- இந்திய வான்வெளியை விமானப் போக்குவரத்திற்கு பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்வு
- வான் எல்லையை தாராளமாகப் பயன்படுத்த அனுமதி அளிப்பதன் மூலமாக விமானங்களுக்கு எரிபொருளும், பயண நேரமும் குறையும்.
- வான்வெளி பயன்பாடு கட்டுப்பாடுகள் தளர்வால் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி மிச்சமாகும்
- விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும்.
- விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்புக்கும் முக்கியத்துவம்
- இஸ்ரோவின் கட்டமைப்பு வசதிகளை தனியாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.
- இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம் விடப்படும்
- 6 விமான நிலையங்களை தனியாருக்கு விடுவதன் மூலம் ரூ.13,000 கோடி திரட்ட இலக்கு
- விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக ரூ.2,300 கோடி ஒதுக்கீடு விமான நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான பணிகள் அரசு, தனியார் ஒருங்கிணைப்புடன் நடத்தப்படும்
- விமான நிலையங்களில் தனியார் பங்களிப்பை அனுமதிப்பதால் ரூ.13,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.