Categories
தேசிய செய்திகள்

பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் இன்று (டிச.28) ஆலோசனை நடத்தினார். டெல்லி ஜீவந்தீப் கட்டடத்தில் நடந்த இந்த ஆலோசனையின்போது “வங்கிகளால் இணைக்கப்பட்ட சொத்துகளை ஆன்லைனில் ஏலம் எடுப்பதற்கான மின் ஏல போர்ட்டலையும் (மின்னணு தளம்) தொடங்கி வைத்தார்.

பொதுத்துறை வங்கிகளின் (பி.எஸ்.பி) தலைவர்கள், இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி மற்றும் முன்னணி தனியார் துறை வங்கிகளின் பிரதிநிதிகளுடன் நடந்த இந்த ஆலோசனையின் போது, நிதிச் செயலாளர், வருவாய் செயலாளர், பொருளாதார விவகார செயலாளர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலாளர், சிபிஐ இயக்குநர், ரிசர்வ் வங்கி பிரதிநிதி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில் இந்திய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மற்றும் சலுகைகள் பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்ரவரி (2020) ஒன்றாம் தேதி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |