Categories
Uncategorized

”அளந்து விட்ட நிர்மலா சீதாராமன்” சீமான் காட்டம் …!!

மத்திய பட்ஜெட் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பின் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பட்ஜெட் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள கருத்தில் , மிக நீண்ட மணிநேரம் வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை என்பதைத் தாண்டி, வேறேதும் இல்லை வியந்து சொல்வதற்கு! நாடு அடைந்திருக்கும் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியை மறைக்க வானளவு அளந்து விட்டிருக்கிறார் அம்மையார் நிர்மலா சீதாராமன்.வழமை போல, தனியார் மயத்திற்கு சந்தை விரித்து இந்தியாவை மொத்தமாக ஏலம்விட எத்தனிக்கும் நிதிநிலை அறிக்கை என்று  தனது ட்வீட்_டரில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |