Categories
தேசிய செய்திகள்

கடன் சுமையில் சிக்கிய சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி கடன்: நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, ” ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி நேற்று ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு அறிவித்தார்.

நாட்டின் பல்வேறு துறையினரோடு ஆலோசனை நடத்திய பின், நிதி தொகுப்பு குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மக்கள் தொகை, அமைப்பு முறை மற்றும் தேவை என்ற 5 தூண்கள் நாட்டிற்கு அவசியம் என அவர் கூறினார். பிபிஇ கிட்டுகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் உற்பத்தியின் வேகம் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

உள்ளூர் நிறுவனங்களை உலகளாவிய நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். மின்சார துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால்,மின்மிகை நாடாக இந்தியா மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். ஜன்தன், ஆதார் மூலம் பயனாளிகளுக்கு நிவாரணம் நேரடியாக செல்வதன் மூலம் புரட்சி ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து 20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை வெளியிட்டார். அவை பின்வருமாறு:

* 41 கோடி பயனாளிகளுக்கு ரூ.52,000 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

* 6.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 71,000 டன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டள்ளது.

* வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு சேர வேண்டிய ரூ.18,000 கோடி தொகையை உடனடியாக விடுவிக்கப்பட்டது.

* 5 அம்ச நோக்கத்துடன் ரூ.20 லட்சம் கொடியிலான சுயசார்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

* சிறு – குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் எனவும், இதனால் 45 லட்சம் நிறுவனங்கள் பயனடையும்.

* ரூ.100 கோடி வரை விற்று, முதல் காணும் நிறுவனங்கள் ரூ.3 லட்சம் கோடி கடன் திட்டத்தால் பயன்பெறுவர்.

* இந்த ரூ.3 லட்சம் கோடி கடன் திட்டம் அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

* அதேபோல, கடன் சுமையில் சிக்கி நிதி உதவி தேவைப்படும் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி கடன் வழங்கப்படும். இதன் மூலம் 2 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும்.

* சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனை திருப்பி செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படும்.

Categories

Tech |