நாடாளுமன்றத்தில் என்குரல் ஒலிக்காது என்றவர்களுக்கு எதுவும் நான் கூற விரும்பவில்லை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார்.
2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது. வைகோ மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடும் சூழலில் இந்த தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அவர் மாநிலங்களவை செல்வாரா என்ற கேள்வி எழுப்பிய நிலையில் , வைகோ மாநிலக்களவை_க்கு செல்ல தடையில்லை என்று நீதிபதி தெரிவித்து சிறை தண்டனையை 1 மாதத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய நாடாளுமன்றத்தில் உங்கள் குரல் ஒலிக்குமா? என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் என்குரல் ஒலிக்காது என்றவர்களுக்கு எதுவும் நான் கூற விரும்பவில்லை என்று பதிலளித்துள்ளார்.