Categories
Uncategorized தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிர்மலா சீதாராமன் அறிவித்த முக்கிய திட்டங்கள் – முழு விவரம்!

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அறிவித்த முக்கிய திட்டங்கள் குறித்து காணப்போம்,

  • ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அரிசி, கோதுமை வழங்கப்படும்.
  • அடுத்த 2 மாதத்துக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும்.
    இதற்காக ரூ.3500 கோடியை அடுத்த இரண்டு மாதங்களுக்கு செலவிடப்பட உள்ளது.
  • மாநில அரசுகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மாநில அரசுகள் இதற்கு தகுதியான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அடையாளம் காண்பார்கள்.
  • ஒருவருக்கு ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் ஒரு கிலோ பருப்பு போன்றவை வழங்கப்படும்.
  • இதன் மூலம் 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த உணவு தானியங்கள் சென்றடையும்
  • புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைகளை நாடு முழுவதும் பயன்படுத்த வகை செய்யப்படும். ரேஷன் அட்டைகளை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பயன்படுத்தலாம்.
  • புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கிராமப்புற 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ.10,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • நகர்ப்புறங்களில் வீடற்றவர்களை தங்கவைக்கும் முகாம்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்படுகிறது.
  • புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.
  • தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகை வீடு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும்
  • பெரிய நகரங்களில் உள்ள பயன்படாத அரசு குடியிருப்புகள் வாடகை குடியிருப்புகளாக மாற்றப்படும்
  • தனியார் கட்டிடங்களையும் இதன் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Categories

Tech |