Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அங்க தான் இருக்கான்…. வசமாக சிக்கிய குற்றவாளி…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

நிர்வாகி கொலை வழக்கில் மீண்டும் ஒரு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகியுமான வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் உள்பட 15-ற்கும் அதிகமான நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து இந்த வழக்கில் சமந்தப்பட்ட தாஜூதீன் என்பவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் நேதாஜி நகரில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின்படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்ய முயற்சி செய்த போது அவர்களிடம் சிக்காமல் அங்கிருந்த தப்பி ஓடியுள்ளார். அப்போது திடீரென தடுக்கி கீழே விழுந்ததில் அவரின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவரை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் காளிமுத்துவேல் முன்பாக ஆஜர்படுத்தி சிறைசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |