Categories
உலக செய்திகள்

வரிய கூட்டிட்டாங்களா…? எல்லாரும் மாத்திக்கோங்க…. கூட்டத்தில் எடுக்கப்பட்ட உடன்பாடு….!!

பிரபல நிறுவனங்களுக்கு குறைந்தபட்சமாக 15% விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் நடந்த கூட்டத்தில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற 7 நாடுகளினுடைய நிதி அமைச்சர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்தக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதனையடுத்து இந்த கூட்டத்தில் அமேசான், கூகுள் மற்றும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு குறைந்தபட்சமாக 15% விழுக்காடு வரியை நிர்ணயிக்க வேண்டு என்ற உடன்பாடு போடப்பட்டது.

மேலும் பிற நாடுகளும் இந்த நிறுவனங்களுக்கான வரியை 15% விழுக்காட்டிற்கு ஏற்றார்போல் மாற்றியமைக்க வேண்டும் என்றுள்ளனர். இதனையடுத்து இந்த நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தை குறைந்த அளவு வரியை விதிக்கும் நாடுகளுக்கு மட்டும் எடுத்து சென்றால், அவற்றிற்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறைக்கப்படும் என்று முடிவு செய்துள்ளனர்.

Categories

Tech |