அலுவலகத்தில் நிர்வாக சீர்கேடுகள் இருப்பதனால் அதை கண்டித்து கட்சியினர் பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தின் முன்பாக சார்பதிவாளர் அலுவலக நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் சார்பாக ஒன்றிய செயலாளர் ஜான் பாஷா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணைத் தலைவர் செயலாளரான வக்கீல் கணேசன் மற்றும் நகர செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட செயலாளரான கலியமூர்த்தி நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான செயலாளரான சங்க மாவட்ட செயலாளர் கொளஞ்சிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.