Categories
தேசிய செய்திகள்

நிர்வாண புகைப்படம்…… முதியவரை ஏமாற்றி ரூ.3 லட்சம் அபேஸ் செய்த இளம் பெண்…. பகீர் சம்பவம்….!!!!

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் எருமப்பட்டி-திப்பிலசேரி பகுதியில் ராஜி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் கொந்நங்குளம் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவருடைய ஆண் நண்பர் மூலம் சாவக்காடு பகுதியை சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவருடன் ராஜிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த முதியவர் 20 வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ராஜியும் அந்த முதிர்யவரும் நெருங்கி பழகிய நிலையில் ஒருநாள் பியூட்டி பார்லர் அறை ஒன்றில் தனிமையில் இருந்து உள்ளனர். அப்போது ராஜி அந்த முதியவருக்கு தெரியாமல் தனிமையில் இருக்கும் காட்சிகளை தனது செல்போனில் போட்டோ எடுத்து உள்ளார்.

அதன் பிறகு இந்த நிர்வாண புகைப்படங்களை முதியவரிடம் காண்பித்த ராஜி இதனை உறவினர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட போவதாகவும் ரூ.50 லட்சம் பணம் தந்தால் அந்த புகைப்படங்களை தந்து விடுவதாக கூறியுள்ளார். இவ்வாறு அடிக்கடி போட்டோவை காட்டி மிரட்டி முதியவரிடம் ராஜி ரூ.3 லட்சம் வரை பறித்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பொங்கி எழுந்த அந்த முதியவர் நடந்த விஷயங்கள் அனைத்தையும் குந்நங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் ராஜியை கைது செய்தனர்‌. அதன் பிறகு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த முதியவர் வயதானவர் என்று தெரிந்துதான் ஆண் நண்பருடன் சேர்ந்து பணம் பறிக்க முயன்றது தெரியவந்துள்ளது. மேலும் இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராஜியின் ஆண் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

Categories

Tech |