Categories
உலக செய்திகள்

நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த குழந்தை…. காப்பாற்ற முயன்ற தாய்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்த தாயும் நீர்வீழ்ச்சியில் வழுக்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் Portland எனும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ள Multnomah நீர்விழ்ச்சிக்கு Olivia என்ற பெண்ணும் அவரது 2 வயது மகளான Katieயும் சென்றிருந்தனர். இந்நிலையில் நீர்வீழ்ச்சியின் மேல் கட்டப்பட்டிருந்த பாலத்தில் இருந்து Olivia-வின் குழந்தை தவறி விழுந்தது. இதனை பார்த்த Olivia தன் குழந்தையை எட்டிப் பிடிக்க முயற்சி செய்தபோது அவரும் வழுக்கி சுமார் 100 அடி உயரத்திலிருந்து தண்ணீருக்குள் விழுந்து விட்டார். இதனால் Olivia-க்கு பலத்த காயம் ஏற்பட்டபோதும் என் குழந்தையை காப்பாற்றுங்கள் என்று சத்தமிட்டார்.

அந்த சத்தம் கேட்டு அங்கிருந்த பெரும்பாலானோர் உடனடியாக உதவிக்கு விரைந்து சென்றனர். அப்போது குளியலறையில் இருந்த Shane Roundy என்பவர் ஏதோ சத்தம் கேட்பதை கவனித்து வெளியே ஓடிவந்தார். இதுகுறித்து அறிந்த Shane Roundy சட்டென்று தண்ணீருக்குள் குதித்து முதலில் குழந்தையை மீட்டார். இதனையடுத்து Oliviya விடம் நீங்கள் பயப்படாதீங்கள் நான் உங்களை காப்பாற்ற திரும்பி வருவேன் என்று Shane Roundy கூறிவிட்டு சென்றிருக்கிறார். அதற்கு Oliviya என் குழந்தையை காப்பாற்றுங்கள் அதுபோதும் என்று Shane Roundy-விடம் திரும்பத் திரும்ப கூறியிருக்கிறார். அதன்பின் குழந்தையை தன் குடும்பத்தாரிடம் Shane Roundy ஒப்படைத்துவிட்டு மீண்டும் Oliviya-வை காப்பாற்ற சென்றிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த பலர் தங்களால் இயன்ற உதவியை செய்துள்ளனர். அங்கு சிலர் தங்களின் உடையை கழற்றி குழந்தையை மூடி குளிரில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்தனர். மேலும் சிலர் பக்கத்தில் உள்ள கடைகளுக்கு சென்று போர்வைகள் வாங்கி வந்திருந்தார்கள். இதற்கிடையில் அங்கிருந்த மருத்துவ உதவி குழுவில் பணியாற்றும் ஒருவரும் தாயையும் மகளையும் பாதுகாப்பான நிலையில் வைத்திருக்க அவசர உதவியை அழைத்தார். இதனைத்தொடர்ந்து சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்ததும் காப்பற்றப்பட்ட தாயும்-மகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். இவர்கள் இருவரது உயிருக்கும் ஆபத்து எதுவும் இல்லை என தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |