Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் நிசர்கா புயல் கரையை கடக்க தொடங்கியது – இந்திய வானிலை ஆய்வு மையம்!

மகாராஷ்டிராவில் அலிபாக் அருகே நிசர்கா புயல் கரையை கடக்க தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

மகாராஷ்டிராவின் ஹரீஹரேஷ்வர் மற்றும் டாமன் இடையே அலிபாக் அருகே இன்று பிற்பகல் கரையைக் கடக்கும், மதியம் 1 மணி முதல் மாலை 5 மணிக்குள் நிகர்ஷா புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு எச்சரித்துள்ளது. ஏற்கனவே அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு கூறப்பட்டுள்ளது.

1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குஜராத் தெற்கு பகுதி, மும்பைக்கு 30 கி.மீ தூரத்தில் வடக்கில் இருக்கும் பகுதிகள் இந்த புயலால் கடுமையாக பாதிக்கக்கூடும். நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத்திற்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத புயலாக இந்த நிசர்கா புயல் இருக்கும், புயலால் மும்பையில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் 30க்கும் மேற்பட்ட பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். கடந்த 1891ம் ஆண்டு மகாராஷ்டிராவில் அதிதீவிர புயல் உருவான நிலையில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நிகர்ஷா புயல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |