விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் வீடியோ வெளியாகியுள்ளது .
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆறு பேர் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் . தற்போது மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர். அதில் அர்ச்சனா ,நிஷா , ரமேஷ்,ரேகா, சனம், ஆஜித், வேல்முருகன் உட்பட 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளதாக தெரிகிறது.
#BiggBossUNSEEN – இன்று இரவு 10:30 மணிக்கு நம்ம #VijayMusic ல.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் pic.twitter.com/QPQB6zknCl
— Vijay Takkar (@vijaytakkaroffl) January 12, 2021
இந்நிலையில் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அன்சீன் எபிசோடு காண புரோமோ வெளியாகியுள்ளது . அதில் அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் தனக்கு மிகவும் பிடித்த விஷயங்களை கூறி வருகிறார் . அப்போது அவர் மணிக்கூண்டு டாஸ்க்கில் நிஷாவுடன் குழாயடி சண்டையில் ஈடுபட்டது மற்றும் ஆரி தனக்கு கணவராக நடித்தது, குழந்தைக்கு பெயர் வைத்தது போன்ற விஷயங்கள் ரொம்ப காமெடியாக இருந்ததாக கூறுகிறார் .