Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…லாபங்கள் பெருகும்…மனநிம்மதி உண்டாகும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!    இன்று இறைவழிபாட்டால் குதூகலம் காணவேண்டிய நாளாக இருக்கும். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். தக்க சமயத்தில் பிறருக்கு உதவிகளைச் செய்வதால் பலருடைய அன்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும். இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெறுவதற்காக பம்பரமாக சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததை விட லாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக லாபத்தை இன்று அடைய கூடும். அனைத்து விஷயங்களுமே நல்ல முன்னேற்றம் இருக்கும்.கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாக இருங்கள் அது போதும். கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு பிரச்சனையும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. மாலை நேரங்களில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தியானம் போன்றவற்றில் ஈடுபடுதல், அதேபோல் நடைபயிற்சி போன்றவற்றையும் மேற்கொள்ளுங்கள்.

ரிஷப ராசி நேயர்களுக்கு திருமணத்திற்காக வரன் பார்த்தவர்கள் இன்று நல்ல தகவலை பெறக்கூடும். அதனால் நீங்கள் ஆனந்தம் கொள்விர்கள் காதலர்களுக்கும் இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |