ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு உதவும் விதமாக அமெரிக்க அதிபர் சுமார் 330 கோடி அமெரிக்க டாலர்களை நிதியாக ஒதுக்கியுள்ளதாக அமெரிக்க சிறப்பு பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள அமெரிக்க படைகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வாபஸ் பெறப்படவுள்ளது. இதற்கிடையே தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள 421 மாவட்டங்களில் 3 ல் 1 பங்கை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகளை வாபஸ் பெற்றாலும் கூட ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு படையினருக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு உதவும் விதமாக அமெரிக்க அதிபர் சுமார் 330 கோடி அமெரிக்க டாலர்களை நிதியாக ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.