உலகளவில் பெண்களில் 3 ஆவது பணக்காரராக திகழும் அமேசான் நிறுவன இயக்குனரின் முன்னாள் மனைவி அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.
உலகில் மிகவும் பிரபலமான அமேசான் நிறுவனத்தின் இயக்குனரும், அவருடைய மனைவியுமான மெக்கன்சி ஸ்காட்டும் கடந்த 2009 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்கள். அவ்வாறு விவாகரத்து பெற்று பிரியும் போது அமேசான் நிறுவனத்தினுடைய 4 சதவீத பங்கை தன்னுடைய மனைவியான மெக்கன்சி ஸ்காட்டிற்கு வழங்கியுள்ளார்.
இதனால் மெக்கன்சி ஸ்காட் உலகளவிலிருக்கும் பெண்களில் 3 வது பணக்காரராக திகழ்கிறார். இந்நிலையில் மெக்கன்சி ஸ்காட் தற்போது அறக்கட்டளைகளுக்கு சுமார் 2.7 பில்லியன் டாலர்களை அதாவது இந்திய மதிப்பில் சுமார் 19 ஆயிரத்து 789 கோடியே 92 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.