சாமியார் நித்தியானந்தா இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் கர்நாடகம் மற்றும் குஜராத் மாநில போலீசார் திணறி வருகின்றனர்.
நித்தியானந்தா இருக்கும் இடத்தை இன்றைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கும் அம்மாநிலபோலீசாருக்கும் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.ஆனால்,அவர் எங்கே இருக்கிறார் என்பது மத்தியஅரசுக்கே தெரியாத நிலைதான் நீடிக்கிறது.இதனால் நீதிமன்றத்தில் அரசும்,காவல்துறையும் இன்றைக்கு என்ன தெரிவிப்பார்கள் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் நித்தியானந்தாவின் முக்கியமான பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
சமீபத்தில் ஈகுவாடார் அருகே ஒரு தீவையே நித்தியானந்தா விலைக்கு வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதை ஈகுவாடார் அரசு மறுத்துள்ளது. கடைசியாக அவர் கரீபியன் கடல் பகுதியில் உள்ள ஹைதி தீவிற்கு சென்றதாக அந்நாடு கூறியுள்ளது. ஆனால் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் கூறியிருப்பது குறிப்பிடதக்கது.