நீதிமன்ற வளாகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி வட்ட சட்ட பணியின் சார்பாக நீதிமன்ற வளாகத்தின் உள்ளே கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜா தலைமையில், அலுவலக பணியாளர்கள், வழக்கறிஞர்கள் தங்களது குடும்பத்தினருடன் தடுப்புச் செலுத்திக் கொண்டனர்.
இந்த முகாமை மருத்துவர் சலாகுதீன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் பிச்சை மற்றும் செவிலியர் நிஷா ஆகியோர் நடத்தினர். மேலும் வட்ட சட்ட பணிகள் குழுவின் இளவரசன் முகாமிற்கான ஏற்பாடு வசதிகளை செய்திருந்தார்.