பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரை பட்டப்பகலில் ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயநகரா மாவட்டத்தில் தாரிஹள்ளி வெங்கடேஷ் (48)என்பவர் ஹோஸ்பேட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். மேலும் இவர் ஒரு காங்கிரஸ் பிரமுகராக இருக்கிறார் . இந்நிலையில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி ஹோஸ்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் பணியில் இருந்த வழக்கறிஞர் வெங்கடேஷ்சை அங்கு பைக்கில் வந்த இளைஞர் கழுத்து மற்றும் மார்பில் சரமாரியாக வெட்டி வீழ்த்தினார். இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் தலை தெறிக்க ஓடி விட்டார்கள். ஆனால் வளாகத்தில் இருந்த போலீசார் அந்த இளைஞரை விடாமல் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
மேலும் சம்பவ இடத்திலேயே வெங்கடேஷ் உயிரிழந்தார். காவல்துறை கொலை செய்தவனை விசாரித்தபோது அவன் பெயர் மனோஜ் என்றும் தாரிஹள்ளி வெங்கடேஷின் உறவினர் என்பதும் தெரியவந்துள்ளது. எதற்காக கொலை செய்தான் என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியவரும் மேலும் சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? என்று பல கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நீதிமன்ற வளாகத்தில் நடந்ததால் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.