Categories
தேசிய செய்திகள்

நிதிஷ்குமார் பேரணியில் லாலு ஆதரவு கோஷம்…!!

பிஹாரில் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் பங்கேற்ற பேரவையில் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்ப பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிஹார் சட்டப்பேரவை கால தேர்தல்  வரும் 28ஆம் தேதி தொடங்கி நவம்பர் ஏழாம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கும் குறைவான நாட்களே உள்ளதால் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் வட்சாவில் நிதிஷ் குமார் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது சில லாலு சிந்தாபாத் என லாலு பிரசாத் யாதவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத நிதிஷ்குமார் தனக்கு வாக்களிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை தேவையில்லாமல் கூச்சலிட வேண்டாமென தெரிவித்தார்.

Categories

Tech |