2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் மறுநாள் செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிந்தது.
மேலும் சட்டப்பேரவையில் இன்று பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு பதிலுரை வழங்கியுள்ளார். இதில் “இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் தமிழகம் வளர்ந்த மாநிலமாக காணபடுகிறது. மேலும் மாவட்ட வாரியாக வயதானோருக்கு கிடைக்கக் கூடிய வருமானத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளும் குறைக்கப்பட வேண்டும் என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் பட்ஜெட் அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல வளர்ந்த மாநிலம், நிதி ஒதுக்கீடு தொடர்பான கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு விதித்து கொண்டே வருகிறது. இருந்தாலும் நமக்கு இருக்கும் பெரிய பிரச்சனை நிதி இல்லை. நாம் பணக்கார மாநிலம். நமக்கு அவர்கள் கொடுத்தால் கொடுக்கட்டும் இல்லை என்றால் நாம் அமைத்துக் கொள்வோம். நம்மிடம் முதலீடு செய்ய வெளிநாடு மற்றும் பொது நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் அதனால் நமக்கு எப்படியும் நிதி கிடைத்து விடும்.” என்று கூறியுள்ளார்.