பல குழந்தைகளை வறுமையின் பிடியிலிருந்து காப்பாற்ற அமெரிக்காவின் அதிபர் நிதியுதவி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் நபர்களின் குடும்பத்திலிருக்கும் குழந்தைகளுக்கு உதவுமாறு நிதியுதவித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது, ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்கள் 6 வயதிற்குட்பட்டவர்களானால் மாதம் 300 டாலர்கள் உதவி தொகையாக வழங்கப்படும்.
மேலும் ஒரு குடும்பத்திலிருக்கும் குழந்தைகள் 6 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு மாதம் 250 டாலர்கள் உதவி தொகையாக வழங்கப்படும் என்னும் திட்டத்தை அமெரிக்க அதிபர் கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து அமெரிக்கா அரசாங்கத்திற்கு 2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்கான வரியை செலுத்தியிருக்கும் நபர்களின் குடும்பத்திற்கு ஜூலை 15 ஆம் தேதி முதலிலிருந்து அமெரிக்க அதிபர் அறிவித்திருக்கும் இந்த நிதி உதவி தானாகவே அவர்களுடைய வங்கி கணக்கில் சேர்ந்துவிடும்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் அறிவித்திருக்கும் இந்த உதவி தொகையால் பல மில்லியன் குழந்தைகள் வறுமையின் பிடியில் இருந்து காப்பாற்றபடலாம் என்று கருதப்படுகிறது.