Categories
தேசிய செய்திகள்

‘கைலாசா அமைந்தே தீரும், குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பம்”… அக்னி பிழம்பாய் வெடித்த நித்தி..!!

கைலாசா அமைத்தே தீருவேன், குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

தலைமறைவாகவுள்ள நித்யானந்தாவை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, நித்யானந்தா ரொம்ப கூலாக தனது தொலைக்காட்சிக்கு பிரசங்கம் செய்யும் வீடியோவை தினந்தோறும் வெளியிட்டு, காவல் துறையினரை குழப்பி வருகிறார். நாளொரு வண்ணம் புது புது கெட்டப்பில் வந்து தற்போது உலகம் முழுக்க தெரிந்த நபராகவும் மாறியுள்ளார் நித்தி.

உலக நாயகன் கமல்ஹாசனுக்குப் பிறகு அதிக கெட்டப்களில் வலம் வருபவர் நித்யானந்தா தான் என்று அவரது சீடர்கள் பெருமை பேசுவது தான் வேடிக்கையாக இருக்கிறது. ஒரு பக்கம் பாலியல் வழக்கு துரத்த, மறுபக்கம் குஜராத் ஆசிரம வழக்கு என நித்தியை துரத்தினாலும் அவர் எங்கே இருக்கிறார் என்ற கேள்விக்கு மட்டும் காவல் துறையினரிடம் பதில் இல்லை. ஆசிரமத்தில் உள்ள பெண் சீடர்கள் நித்தி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைத்து வருகின்றனர்.

Image result for Nithyananda said 40 lakh people have applied for citizenship.

பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் ஓரினச் சேர்க்கைக்கு தன்னை துன்புறுத்தினார் என்றும் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனால், நித்தி அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் தன்னை குற்றம் சுமத்துபவர்கள் முட்டாள்கள், நானே மனிதக் கடவுள் என்று கூறி வருகிறார். அதை விடுங்கப்பா… எந்த இடத்தைக் கேட்டாலும் கச்சிதமாக காட்டும் கூகுள், ‘கைலாசா’ பற்றி கேட்டால் கூகுளே குழம்பி போகிறதாம்.

காவல் துறையினரும் நித்யானந்தாவை கண்டுபிடிப்பதில் மும்முரம் காட்டி வந்தாலும், அவ்வப்போது வீடியோவில் ‘ சிவனின் ஆணை, மீனாட்சி என் பின்னாடி இருக்கா ‘ என்று காவல் துறையினரிடமே கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி வருகிறார் நித்தி.

இந்நிலையில், வழக்கம்போல் புதிய வீடியோவை வெளியிட்டு சொற்பொழிவாற்றிய நித்யானந்தா, ‘ 2003ஆம் ஆண்டு முதல் நான் சந்திக்காத குற்றப்பிரிவே கிடையாது. அதையெல்லாம் தூசி போல் தட்டியெறிந்து தன்னை நிரபராதி என நிரூபித்துள்ளேன்.

எப்போதும் போல் கலகலகப்பாக சிரித்துப் பேசி, கண்களை உயர்த்தி கைகளை அசைத்தும் ஆன்மிகத்தில், நான் என்றைக்கோ தலைவனாகி விட்டேன். கைலாசாவில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நான் கைலாசா அமைப்பது உறுதி’ என பாகுபலி ராஜமாதா போல் இதுவே என் கட்டளை…. கட்டளையே என் சாசனம் என்ற தொனியில், ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டிசம்பர் 18ஆம் தேதிக்குள் ( நாளை) பெங்களூரு காவல் துறை நித்யானந்தா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |