கொரோனா பாதிப்பு இந்தியாவில் வேகமாக குறைந்து வருவதாக மத்திய நிதி ஆயோக் குழு கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் தொடர்ந்து பதற்ற நிலையில் இருந்தனர். இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட மத்திய நிதி ஆயோக் குழுவானது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் ஊராடங்கின் முதல் கட்டத்தில் 5 நாட்களில் இரண்டு மடங்காக பரவி வந்ததாகவும்,
அதற்கு முன் மூன்று நாட்களில் இரண்டு மடங்காக பரவி வந்ததாகவும், தற்போது 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இரண்டு மடங்காக பரவி வருவதாகவும் தெரிவித்தது. எனவே கொரோனா பாதிப்பு சீராக இந்தியாவில் குறைந்து வருகிறது. விரைவில் இதிலிருந்து மக்கள் மீண்டு வருவர் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது. இந்த செய்தி இந்திய மக்களிடையே ஒரு விதமான ஆறுதலைவும் மன நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.