நித்தியானந்தா மீது பல்வேறு புகார்கள் சுமத்தப்பட்ட நிலையில் அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இவர் கைலாசா என்ற ஒரு தனித்தீவில் இருப்பதால் அவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனால் கைலாசாவிலிருந்து நித்தியானந்தா அவ்வப்போது சமூக வலைதளங்களின் மூலமாக தன்னுடைய பக்தர்களுக்கு காட்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பாஜக கட்சியின் ஓபிசி மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவாவுக்கு நித்தியானந்தா தர்ம ரட்சகர் விருதை வழங்கினார். அதாவது சூர்யா சிவா இந்து மதத்திற்காக பல்வேறு பணிகளை செய்து வருவதாகவும் தொடர்ந்து இந்து மதத்திற்காக குரல் கொடுத்து வருவதாலும் தர்ம ரட்சகர் விருதை கொடுத்திருப்பதாக நித்தியானந்தா கூறினார்.
இந்நிலையில் இயக்குனர் பேரரசுக்கும் நித்தியானந்தா தற்போது தர்ம ரட்சகர் விருதை அறிவித்துள்ளார். இது குறித்து நித்தியானந்தா கூறியதாவது, இயக்குனர் பேரரசு தொடர்ந்து இந்து மதத்திற்கு ஆதரவாக பேசி வருகிறார். அவருடைய எல்லா படங்களின் தலைப்புகளுமே ஆன்மீக ஸ்தலங்களின் பெயர்களாக தான் இருக்கும். அவருடைய இந்துமத பணி மிகப் பெரிய பணியாகும். இந்து மதத்திற்காக தொடர்ந்து குரல் கொடுப்பதும் களம் காணுவதும் அவருடைய மிகப்பெரிய பணிகளை நான் அறிவேன். நானும் கைலாசாகும் என்றும் இயக்குனர் பேரரசுக்கு துணையாக இருப்போம் என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.