Categories
தேனி மாவட்ட செய்திகள்

சேமிப்பு பணத்தை நிவாரணத் தொகையாக அளித்த அக்கா-தம்பி…. நிதியை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ…. தேனியில் நடந்த சம்பவம்….!!

தேனியில் அக்கா-தம்பி தங்களுடைய சேமிப்பு பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள்.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்கும் பணிக்காக முதலமைச்சரினுடைய நிவாரண நிதிக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். அதேபோல் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஆசிரியர் வேலையை செய்து வரும் மாதவன் என்பவருடைய மகள் மற்றும் மகன் தாங்கள் சேமித்து வைத்த சிறுசேமிப்பு பணத்தை நிதிக்கு வழங்குவதற்கு முடிவு செய்தனர்.

அதன்படி இருவரும் தலா 5,000 ரூபாய் வீதம் மொத்தமாக 10,000 ரூபாயை முதலமைச்சரினுடைய நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இதனை உத்தமபாளையத்தினுடைய ஆர்.டி.ஓவான சக்திவேல் பெற்றுக்கொண்டார்.

Categories

Tech |