வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 320 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 380 கி.மீ. தொலைவிலும் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் கே. பாலச்சந்திரன் இன்று காலை தெரிவித்தார்.
சுமார் 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் இப்புயல், அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தது
இந்த நிலையில் தற்போதைய தகவலின் படி கடலூரிலிருந்து 180 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 190 கி.மீ., தொலைவிலும், செல்லையிலிருந்து 250 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.