Categories
மாநில செய்திகள்

போ புயலே போய்விடு…. ”நிவர்”யை விரட்டும் ”கவி பேரரசு”… கவிதை மூலம் ட்விட் …!!

நிவர் புயலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் கவிப் பேரரசு வைர முத்து கவிதை வடிவில் ட்விட் போட்டுள்ளார்.

நிவர் புயல் எதிரொலியாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இன்று நண்பகல் அதிதீவிர புயலாக வலுப்பெறும் இப்புயல், இன்று (நவம்பர் 25) இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு சென்னையில் மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கவிஞ்சர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், போ புயலே போய்விடு பச்சைமரம் பெயர்த்துப் பல் துலக்காமல் வேய்ந்தவை பிரித்து விசிறிக் கொள்ளாமல் குழந்தையர் கவர்ந்து கோலியாடாமல் பாமர உடல்களைப் பட்டம் விடாமல் சுகமாய்க் கடந்துவிடு சுவாசமாகி விடு ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்? என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |