நிவர் புயல் எதிரொலியாக சென்னை முழுவதும் விடிய விடிய கனமழை பெய்து வருகின்றது.
நிவர் புயலை தொடர்ந்து சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வருகின்றது. நேற்று இரவும் கூட விட்டுவிட்டு கனமழை நீடித்து வந்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னையில் பெய்த மழை அளவு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 24 மணி நேர நிலவரப்படி சென்னையில் அதிகபட்சமாக புரசைவாக்கம் பகுதியில் 14.8 சென்டி மீட்டர் அளவிலான மழையானது பதிவாகி இருக்கிறது. அதற்கு அதிகப்படியாக அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் பகுதியில் 14.5 சென்டி மீட்டர் அளவிலான மழையும், கிண்டியில் இருக்கக்கூடிய அண்ணா பல்கலைக்கழகம் பகுதியில் 14.3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது.
இந்த கணக்கீடு ஆனது அயனாவரம், எழும்பூர், மாம்பலம், மைலாப்பூர், பெரம்பலூர் , தண்டையார்பேட்டை, ஆலந்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட 16 இடங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. மயிலாப்பூர் பகுதியில் 13 சென்டிமீட்டர், எழும்பூர் பகுதியில் 13.7 சென்டிமீட்டர், மாம்பலம் பகுதியில் 13.6 சென்டிமீட்டர், தண்டையார்பேட்டை பகுதியில் 11 சென்டி மீட்டர், ஆலந்தூர் பகுதியில் 11.9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.