Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”நிவர்” உடனே விடாது…. போனாலும் எச்சரிக்கை…. 6 மணி நேரம் உஷாரா இருங்க …!!

நிவர் புயல் கரையை கடந்த பிறகும் 6 மணி நேரத்துக்கு வலுவானதாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு தொடர்ந்து தெரிவித்துக்கொண்டு வருகின்றது. இந்நிலையில் சற்று முன்பு செய்தியாளர்களிடம் புயல் குறித்த விவரங்களை தெரிவித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர், தீவிர புயலின் நிபர் தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர், புதுவையில் இருந்து சுமார் 190 கிலோமீட்டர்,   கடலூரில் இருந்து சுமார் 180 கிலோ மீட்டரில் நிலை கொண்டுள்ளது. நிபர் அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு புதுவை அருகே கரையை கிடைக்கக்கூடும்.

தற்போதைய நிலவரப்படி புயல் கரையை கடந்த பிறகு கடலோர மாவட்டங்களில் அதனுடைய வலுவானது 6 மணி நேரத்துக்குள் தொடரக்கூடும். அதன் பின்னர் படிப்படியாக வலுவிழக்கும். இதன் காரணமாக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நாளை மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். சூறாவளி காற்றானது மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில், சமயங்களில் 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும்.

ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நாளை காலை முதல் பிற்பகல் வரை காற்று வீசக்கூடும். பலத்த காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சமயங்களில் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும்.திருச்சி சேலம் நாமக்கல் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை முற்பகல் முதல் பிற்பகல் வரை வீசக்கூடும் என தெரிவித்தார்.

Categories

Tech |