உக்ரைனின் தலைநகரம் உள்ளிட்ட பல இடங்களில் உணவு, தண்ணீருக்கு வரும் நாட்களில் பஞ்சம் ஏற்படும் என்று எம்பிக்கள் எச்சரித்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா 28வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் மனிதாபிமான நிவாரண உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கு இந்தியாவின் விமானிகளை பயன்படுத்த வேண்டும் என்று எம்பிக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து 20 எம்பிக்கள் அதிபர் ஜோ பைடனுக்கு எழுதிய கடிதத்தில் “உக்ரைனின் தலைநகரம் உட்பட பல இடங்களில் வரும் நாட்களில் உணவு, குடிநீர் ஆகியவற்றுக்கு கடும் பஞ்சம் ஏற்படும், இதனால் ஐக்கிய அரபு அமீரகம், பிரேசில், இந்தியா, எகிப்து போன்ற நாடுகளை தொடர்பு கொண்டு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு விமானிகளை அழைக்குமாறு” வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில் ரஷ்ய ராணுவம் விமானங்களை சுட்டு வீழ்த்தும் என்பதால் நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்கு அந்நாட்டிற்கு ஆபத்து இல்லாத நாடுகளின் விமானங்களை அனுமதிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.