Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“என்ன செய்ய போகிறோம்” வருத்தத்தில் விவசாயிகள்…. சேதமடைந்த நெற்பயிர்கள்….!!

நெல் வயல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் துணிசிரமேடு உள்பட்ட 10-க்கும் அதிகமான கிராமங்களில் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி உள்ளது.

இதனால் விவசாயிகள் அனைவரும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். எனவே மழையால் சேதமடைந்த நெல் வயல்களை அதிகாரிகள் மூலமாக ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருகின்றனர்.

Categories

Tech |