கன்னியாகுமரியில் கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு அமைச்சர் 4 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அருமனை, ராமன்துறை போன்ற பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவும் வகையில் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் நேரில் சென்று தலா 4 லட்சம் ரூபாய்க்கான நிதி தொகையை வழங்கியுள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இடிந்த வீட்டை மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் சரி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார். இதைதொடர்ந்து அவர் புயல் காரணமாக பாதிப்படைந்த தேங்காய்ப்பட்டணம் துறைமுகம், இரையுமன்துறை , மாஞ்சாலுமூடு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ள்ளார்.