Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில்…. வசமா சிக்கிய ஒருவர்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடைக்கோடு பகுதியில் செலின்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகின்றார். இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் வளாகத்தில் நின்ற கார் மற்றும் மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து நாசமானது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இதனையடுத்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் அருமனை சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் மேல்புறம் சந்திப்பு அருகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகப்படும் வகையில் நடமாடிய ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்ததால் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் அவர் குழித்துறை பாலவிளயை சேர்ந்த அருண் என்பதும் இவர் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த நபர் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனைதொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு விசாரணையில்  அவர் கொடுத்த தகவலின்படி மற்றொரு நபர் குழித்துறை பாலவிளையை சேர்ந்த முக்கிய குற்றவாளி விஜய் லால் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து, தலைமறைவாக இருக்கின்ற விஜய்  லாலை வலைவீசி தேடி வருகின்றனர். ஆகவே விஜய் லாலிலை கைது செய்தால் தான் பெட்ரோல் குண்டு வீசியதற்கான முழு விவரம் தெரியும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |