இந்திய வம்சாவளி பெண்ணுக்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொடுக்க இருந்த முக்கிய பதவியின் நியமனம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இந்தியர்களுக்கு சில முக்கிய பதவிகள் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன் பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் என்ற பெண்ணை வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை குழுவின் இயக்குனராக நியமிப்பதாக உறுதி அளித்தார். ஜோ பைடனின் இந்த வாக்குறுதிக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர் .
மேலும் ஆளும் கட்சியைச் சேர்ந்த செனட் சபை எம்.பி ஜோ மான்சின் நீரா டாண்டன் அந்த முக்கிய பதவியில் நியமனம் செய்யப்பட கூடாது என்பதை எதிர்த்து வாக்களிக்க போகிறேன் என்று கூறினார் . இதைப்போல் எதிர்க்கட்சியை சேர்ந்த மிட் ரூம்ணி, ராப் போர்ட்மேன், சூசன் கொலின்ஸ் ஆகிய செனட் சபை எம்.பிகளும் நீரா டாண்டனின் பணி நியமனத்திற்கு எதிராக வாக்களிப்போம் என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் நீரா டாண்டன் பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை குழுவின் இயக்குனர் பதவிக்கான வேட்புமனுவில் இருந்து தன் பெயரை திரும்பப் பெற வேண்டும் என்று ஜோ பைடனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இதனால் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜோ பைடன் நீரா டாண்டனின் நியமனத்தை வாபஸ் பெறுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவரது கோரிக்கையின் பேரில் இந்த நியமனம் வாபஸ் பெறப்பட்டது என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.