நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற அழைத்துப் பேச வேண்டுமென திரு ஆர் செல்வம் வலியுறுத்துகிறார்.
அரசு ஊழியர் சங்கங்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முதலமைச்சர் நேரில் அழைத்து பேச வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு ஆ. செல்வம் வலியுறுத்தியுள்ளார். தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தங்களது கோரிக்கைகள் நிறைவேற பட்சத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் மாநில பிரதிநிதித்துவம் மாநாட்டில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.